Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

5 Star ஹோட்டல் , கிழிந்த Socks | #IITBomnbay பேராசிரியரின் படங்கள் வைரல் - காரணம் தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க!

05:07 PM Oct 02, 2024 IST | Web Editor
Advertisement

மும்பை ஐஐடி பேராசிரியரான சோலங்கி கிழிந்த காலுறை அணிந்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அமர்ந்திருந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கான காரணம் குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

மும்பை ஐஐடியில் பேராசிரியராக பணிபுரிபவர் சேத்தன் சிங் சோலங்கி. இவர் புதுடெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அமர்ந்துகொண்டு மடிக்கணினியில் முக்கியமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஷயம் என்னவென்றால் அவர் அணிந்திருந்த காலுறை முழுக்க ஓட்டைகள் உள்ள கிழிந்த காலுறையாக இருந்தது குறித்து இணையவாசிகள் கேள்வி எழுப்பினர்.

சோலார் ஆற்றல் குறித்த தனது முக்கியமான ஆராய்ச்சிக்காக அவர் "இந்தியாவின் சோலார் மனிதன்" அல்லது "சோலார் காந்தி" என்று சோலங்கி அழைக்கப்படுகிறார். தி எகனாமிக் டைம்ஸ் எனர்ஜி லீடர்ஷிப் உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக அவர் தயாராகிக் கொண்டிருக்கும் படங்கள் தான் வைரலாகியுள்ளது.

மும்பை ஐஐடியில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கார்பன் தடயத்தைக் குறைப்பது குறித்த ஆய்வில் அதீத ஈடுபாடு கொண்டவராக உள்ளார். இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் 43,000 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து சூரிய சக்தியை பற்றி பிரசாரம் செய்வது மக்களை அதன் பயன்பாட்டிற்கு மாற்றுவதும் அவரது முக்கியப் பணியாக இருந்து வருகிறது.

சேத்தன் சோலாங்கியின் படங்கள் வைரலானதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவரை டேக் செய்து பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிலளித்துள்ள சேத்தன் சோலங்கி தெரிவித்துள்ளதாவது..

“புதிய காலுறைகளை வாங்குவதற்கு என்னால் இயலும் தான், அதற்கான வசதி உள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் காரணங்களால் பொருட்படுத்தவில்லை. எனது கார்பன் தடத்தை குறைக்க நான் குறைந்த அளவு பொருட்களை பயன்படுத்த முயற்சிக்கிறேன். இயற்கையிலிருந்து நாம் எடுத்துக் கொள்வதை திருப்பி கொடுக்க முடியாது. இயற்கையில் உள்ள அனைத்தும் வரையறுக்கப்பட்டவை," என்று சோலங்கி குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Chetan Sing Solankicollege proffessorIIT Bombay
Advertisement
Next Article