Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழப்பு, 5 பேர் படுகாயம்!

04:32 PM Jun 13, 2024 IST | Web Editor
Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். 

Advertisement

முதற்கட்ட தகவலின் படி நாக்பூர் நகர் பகுதியில் இருந்து 25 கி.மீ தொலைவில் ஹிங்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்னா கிராமத்தில் உள்ள சாமுண்டி வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த வெடிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 5 பேர் காயமடைந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாக்பூர் மாநகர காவல் ஆணையர் ரவீந்தர் சிங்கால் தரப்பில் கூறியதாவது,

“தம்னாவில் உள்ள வெடிபொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். குழுவினர் சம்பவ இடத்திற்கு செல்ல உள்ளனர்” என்று மாநகர காவல் ஆணையர் ரவீந்தர் சிங்கால் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதியம் 1 மணியளவில் தொழிலாளர்கள் வெடிபொருள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில்,  இந்த வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் நடந்த விபத்தில், இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருவதால் மேலும் யாரேனும் இவ்விவத்தில் சிக்கியிருக்கிறார்களா என்பது குறித்த இறுதி தகவல் இதுவரை கிடைக்கவில்லை.  இந்நிலையில், தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

Tags :
blastcity police commissionerDhamna villageexplosives factoryexplosives manufacturing factoryHingna police stationinjuredinvestigationNagpurnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article