Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

9 நாட்களில் அடுத்தடுத்து சரிந்து விழுந்த 5 பாலங்கள்... பீகாரில் பரபரப்பு!

01:47 PM Jun 29, 2024 IST | Web Editor
Advertisement

பீகாரில் இன்று மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பீகார் மாநிலத்தில் சமீப காலத்தில் பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகியுள்ளது. ஜூன் 19ம் தேதியன்று அராரியா மாவட்டத்தின் பகாரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.  பின்னர் ஜூன் 22-ம் தேதியன்று சிவான் மாவட்டத்தில் காங்டாக் கால்வாய் குறுக்கே கட்ட பாலம் இடிந்து விழுந்தது.

அடுத்த நாள் (ஜூன் 23) கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம் இடிந்து விழுந்தது. பின்னர் 2 நாள் கழித்து ஜூன் 26 கிஷண்கஞ்ச் மாவட்டத்தில் கங்கை நதியை மஹாநந்தா நதியுடன் இணைக்கும் துணை நதியான மடியாவின் குறுக்கே, 70 மீட்டர் நீளத்துக்கு பாலம் இடிந்து விழுந்தது.

இதனையடுத்து இன்று (ஜூன் 28) மதுபானி மாவட்டத்தில் 5வது சம்பவமாக பாலம் இடிந்து விழுந்தது. இதன் மூலம் கடந்த 9 நாட்களில் 5 வது முறையாக பாலம் இடிந்து விழும் சம்பவம் நடந்துள்ளது.  இதுகுறித்து பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் கூறும்போது “ வாழ்த்துகள்..! பீகாரில் இரட்டை என்ஜின் அரசின் இரட்டை அதிகாரத்தில், 9 நாள்களில் மட்டும் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய ஜனநாயக கட்சிகளுடன் இணைந்துள்ள முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், 9 நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. பாலங்கள் இடிந்து விழும் நிலையில் பொதுமக்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதை "ஊழல்" என்று சொல்லாமல் "மரியாதை" என்று சொல்லிக்கொள்கிறார்கள் சில நேர்மையானவர்கள். இந்தச் சுரண்டல்களுக்கு எதிராக மீடியாக்கள் வாய் திறக்காதது ஏன்?. இந்தப் பாலங்கள் இடிந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
BiharBridgebridge collapsedtejaswi yadav
Advertisement
Next Article