Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கிய முதல்நாளே ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு!

07:50 PM Jan 07, 2024 IST | Web Editor
Advertisement

அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்களின் 2 நாள் மாநாடு சென்னையில் தொடங்கியது. முதல் நாள் முடிவில், 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Advertisement

சென்னை நந்தம்பாக்கத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலீட்டாளர்களை மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார்.

இந்த மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். மேலும் டாடா, டிவிஎஸ், கோத்ரேஜ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Advertisement
Next Article