4 அவது டி20 - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்வு!
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2-1 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில் டி20 போட்டிகள் துவங்கியுள்ளன. அதன் படி முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ஹெரிடேஜ் பேங்க் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
தற்போது இவாட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
அணி விவரம் :
ஆஸ்திரேலியா : மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ் (கீப்பர்), டிம் டேவிட், ஜோஷ் பிலிப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல் , பென் டுவார்ஷுயிஸ், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா.
இந்தியா : அபிஷேக் ஷர்மா , ஷுப்மான் கில் , சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர் , ஜிதேஷ் சர்மா (கீப்பர்), சிவம் துபே , அர்ஷ்தீப் சிங் , வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.