48 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்...!
06:20 PM Jan 07, 2024 IST
|
Web Editor
Advertisement
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி ஆக பதவி உயர்வு அளித்துள்ளது தமிழ்நாடு அரசு.
இதில் தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு புதிய எஸ். பி. க்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு போட்ட திடீர் ஆர்டர் கூடுதல் ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம் வருமாறு:-
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஐஜி ஆர்.தமிழ்ச்சந்திரன் ஐபிஎஸ், கூடுதல் டிஜிபி ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு எஸ்.பி ஜெயஸ்ரீக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னை ஏடிஜிபி ஆபரேஷன் பிரிவுக்கு இடமாற்றம்.
- தலைமை காவல் பணியகத்தின் துணை ஐஜியாக இருந்த டாக்டர் சாமுண்டீஸ்வரி, சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவின் ஐஜியாக பதவி உயர்வுடன் கூறிய இடமாற்றம்.
- தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் டிஐஜி லக்ஷ்மி ஆயுதப்படை தலைமையகத்தின் ஐஜியாக பதவி உயர்வுடன் இடமாற்றம்.
- சிஐடி நுண்ணறிவுப்பிரிவு டிஐஜியாக இருந்த ராஜேந்திரன் ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஆவடி மாநகர கூடுதல் ஆணையராக நியமனம்.
- வேலூர் சரக டிஐஜியாக இருந்த எம்.எஸ்.முத்துசாமி ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு தமிழ்நாடு காவல்துறை அமாடமியின் கூடுதல் இயக்குநராக இடமாற்றம்.
- சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் இணை ஆணையர் மயில்வாகனன் ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
- சென்னை காவல் தலைமையகத்தின் ஐஜியாக இருந்த மல்லிகா ஐபிஎஸ் சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவுக்கு இடமாற்றம்.
- சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் ஏஐஜி பி.ஆர்.வளர்மதி ஐபிஎஸ் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு இடமாற்றம்.
- கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் வேலூர் சரக டிஐஜியாக நியமனம்.
- சென்னை பெருநகர காவல்துறையின் துணை ஆணையர் டி.மகேஷ்குமார் ஐபிஎஸ் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர கூடுதல் ஆணையராக நியமனம்.
- சென்னை சைபர் கிரைம் பிரிவின் காவல் கண்காணிப்பாளர் தேவராணி ஐபிஎஸ், டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர காவல்துறையின் இணை ஆணையராக இடமாற்றம்.
- சென்னை காவல் தலைமையகத்தில் ஏஐஜியாக இருந்த ஈ.எஸ்.உமா ஐபிஎஸ், சேலம் சரக டிஐஜியாக நியமனம்.
- முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரியாக இருந்த ஆர்.திருநாவுக்கரசு ஐபிஎஸுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு காவல் நுண்ணறிவுப்பிரிவின் டிஐஜியாக நியமனம்.
- காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயந்தி ஐபிஎஸ், கடலோர காவல் கண்காணிப்பு பிரிவின் டிஐடியாக நியமனம்.
- ஆவடி பட்டாலியன் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜி.ராமர் ஐபிஎஸ் ரயில்வே காவல்துறையின் டிஐஜியாக நியமனம்.
- காவல் தமைமையகத்தின் ஐஜி இருந்த ராதிகா ஐபிஎஸ் குற்றத் தடுப்பு பிரிவு ஐஜியாக இடமாற்றம்.
- ஆயுதப்படை ஐஜி எம்.வி.ஜெயாகௌரி காவல் பயிற்சியக கல்லூரிக்கு இடமாற்றம்.
- சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் ஐஜி ரூபேஷ்குமார் மீனா சென்னை காவல் தலைமையகத்திற்கு இடமாற்றம்.
- திருநெல்வேலி மாநகர ஆணையர் சி.மகேஸ்வரி தாம்பரம் மாநகர கூடுதல் ஆணையராக நியமனம்.
- ஆவடி மாநகர இணை ஆணையர் விஜயகுமார் சென்னை மேற்கு மண்டல சட்டம் ஒழுங்கு பிரிவின் இணை ஆணையராக இடமாற்றம்.
- காவல் தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் திக்ஷா மிட்டல் விழுப்புரம் சரக டிஐஜியாக இடமாற்றம்.
- விழுப்புரம் சரக டிஐஜி ஜியூவல் ஹெக்யூ திருச்சி சரக டிஐஜியாக இடமாற்றம்.
- தஞ்சாவூர் சரக டிஐஜி ஜெயச்சந்திரன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பகத்தின் துணை இயக்குநராக இடமாற்றம்.
- சென்னை பெருநகர காவல்துறையின் இணை ஆணையர் மனோகர் திருச்சி சரக டிஐஜியாக இடமாற்றம்.
- திருச்சி டிஐஜி பகலவன் சிஐடி நுண்ணறிவு பிரிவின் டிஐஜியாக இடமாற்றம்.
- தாம்பரம் சட்டம் ஒழுங்கு பிரிவு இணை ஆணையர் மூர்த்தி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக நியமனம்.
- நுண்ணறிவு பிரிவின் டிஐஜி ஜெ.மகேஷ் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் டிஐஜியாக நியமனம்.
- குடிமை பொருட்கள் பிரிவின் எஸ்.பி கீதா திருநெல்வேலி மாநகர துணை ஆணையராக நியமனம்.
- திருநெல்வேலி மாநகர துணை ஆணையராக இருந்த சரவணக்குமார் கோவை தெற்கு துணை ஆணையராக நியமனம்.
- கோவை தெற்கு மண்டல துணை ஆணையராக இருந்த சண்முகம் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளராக நியமனம்.
- காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளராக இருந்த எம்.சுதாகர் பரங்கிமலை துணை ஆணையராக நியமனம்.
- பரங்கிமலை துணை ஆணையராக இருந்த தீபக் ஸ்வாட்ஜ் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளராக நியமனம்.
- விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஷெஷாங் சாய், க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம்.
- க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளர் சசி மோகன், கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளராக நியமனம்.
- தமிழ்நாடு காவல் அகாடமியின் காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.செல்வராஜ் அரியலூர் காவல் கண்காணிப்பாளராக நியமனம்.
- அரியலூர் காவல் கண்காணிப்பாளர் ப்ரோஸ்கான் விருதுநகர் காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம்.
- கோவை சட்டம் ஒழுங்கு பிரிவின் துணை ஆணையர் சண்டீஸ் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம்.
- ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம்.
- மதுரை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தேனி காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம்.
- தேனி காவல் கண்காணிப்பாளர் தேவாங்கரே பிரவின் உமேஷ் மதுரை காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம்.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளர் கிங்ஸ்லீன் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளராக நியமனம்.
- திருநெல்வேலி நகர காவல் தலைமையகத்தின் துணை ஆணையர் ஜிஎஸ் அனிதா மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக நியமனம்.
- மதுரை மாநகர சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக பாக்ய சினேக பிரியா பயங்கரவாத தடுப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளராக நியமனம்.
- பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவின் மகலினா ஐடன் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் எஸ்.பியாக நியமனம்.
Next Article