Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி!

01:53 PM Jun 07, 2024 IST | Web Editor
Advertisement

ரஷ்யாவில் மருத்துவம் பயின்று வந்த நான்கு இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

Advertisement

ரஷ்யாவில் உள்ள வெலிகி நோவ்கோரோட் நகரின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  வோல்கோவ் ஆற்றில்  மாணவி ஒருவர் முதலில் சிக்கியுள்ளார்.  அந்த மாணவியை மீட்க நான்கு பேர் ஆற்றில் இறங்கியுள்ளனர்.  அதில் ஒருவரை அங்கிருந்தவர்கள் மீட்டுள்ளனர்.  மற்ற அனைவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்த நான்கு மாணவர்களில் இருவர் பெண்கள் எனவும் அவர்கள் அனைவருக்கும் 18 முதல் 20 வயது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை அந்த நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  இதுகுறித்து மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தள பக்கத்தில், “உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் வசம் ஒப்படைக்கும் வகையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

அவர்களை பிரிந்துள்ள குடும்பத்துக்கு எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.  அவர்களுக்கு இந்நேரத்தில் வேண்டிய அனைத்து உதவியையும் வழங்குவோம்.  பத்திரமாக மீட்கப்பட்ட மாணவருக்கு முறையாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளது.

Tags :
deathindian studentsriverrussia
Advertisement
Next Article