Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காஸா மீது 4 நாட்கள் போர்நிறுத்தம்! இஸ்ரேல் அறிவிப்பு!

10:26 AM Nov 22, 2023 IST | Web Editor
Advertisement

காஸா மீதான தாக்குதலை 4 நாள்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

Advertisement

காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி கடந்த மாதம் 7-ஆம் தேதி தாக்குதலை ஹமாஸ் அமைப்பினர் நடத்தி உள்ளனர். அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். 

அத்துடன்,  200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினர் காஸாவுக்குள் கடத்திச் சென்றனர். இந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்தது.

அதற்காக காஸா பகுதியை ஒரு மாதத்துக்கும் மேல் முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டுவீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் காஸாவுக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது.

இதையும் படியுங்கள்:தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

இதுவரை  இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் படையினர் மற்றும்  பாலஸ்தீன மக்கள் உள்பட 13,300 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில், ஹமாஸ் படையினர் கடத்திச் சென்ற பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையை கத்தார் நாட்டின் தலைமையில் இஸ்ரேல் மேற்கொண்டது. இந்த பேச்சுவார்த்தையில் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் அரசு  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிணைக் கைதிகளை மீண்டும் தாயகம் அழைத்து வர இஸ்ரேல் கடமைப்பட்டுள்ளது. மேலும், முதல் கட்டமாக இன்று இரவு முதல் 4 நாள்களுக்குள் பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவிக்கவுள்ளனர். அதுவரை காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, 4 நாட்களுக்கு பிறகு கூடுதலாக விடுவிக்கப்பட்டும். ஒவ்வொரு 10 பிணைக் கைதிகளுக்கும் ஒருநாள் போர் நிறுத்தம் செய்யப்படும். அதே சமயம், அனைத்து பிணைக் கைதிகளை திரும்பப் பெறவும், இஸ்ரேலுக்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஹமாஸ் படையினரை ஒழிக்கவும் மீண்டும் போர் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
4DaysAnnouncementAttackGazaIsraelstop
Advertisement
Next Article