Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3வது டி20 போட்டி - ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

09:16 PM Jul 10, 2024 IST | Web Editor
Advertisement

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .

Advertisement

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.  ஜெய்ஸ்வால் 36 ரன்களில் வெளியேறினர். தொடர்ந்து ஆடிய அபிஷேக் ஷர்மா 10 ரன்களுக்கு வெளியேறினார்.

பின்னர் கில் - ருதுராஜ் ஜோடி சேர்ந்தனர். சுப்மன் கில் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் . அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெயிக்வாட் 49 ரன்களில் அவுட் ஆனார்.  இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.  ஜிம்பாப்வே தரப்பில் ராசா,  பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது.

ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லி மாதேவேரே- தடிவானாஷே மருமணி ஆகியோர் களமிறங்கினர்.  ஜிம்பாப்வே அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.  வெஸ்லி மாதேவேரே 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரையன் பென்னட் 4 ரன்களிலும், தடிவானாஷே 13 ரன்களிலும், ராசா 15 ரன்களிலும், ஜொனாதன் காம்ப்பெல் 1 ரன்னிலும் வெளியேறினர்.

தொடர்ந்து, டியான் மியர்ஸ் - கிளைவ் மடாண்டே ஜோடி சிறப்பாக ஆடியது. கிளைவ் மடாண்டே 37 ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் டியான் மியர்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.  இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் ஆவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற அளவில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

Tags :
#SportsCricketIND vs ZIMTeam IndiaZIM vs INDZimbabwe
Advertisement
Next Article