Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3-ம் சுற்று பொறியியல் #counseling நிறைவு - இதுவரை 1.23 லட்சம் மாணவர்கள் சேர்க்கை!

10:22 AM Aug 29, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 3-ஆம் சுற்று கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இதுவரை 1.23 லட்சம் மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். 

Advertisement

தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 1,14,149 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 82, 693 மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தோ்வு செய்தனர். அதில் தரவரிசை, இடஒதுக்கீடு அடிப்படையில் 3,769 அரசுப் பள்ளி மாணவர்கள் உள்பட 51,920 பேருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரங்களை www.tneaonline.org எனும் வலைதளத்தில் அறியலாம். சிறப்புப் பிரிவு மற்றும் பொதுக் கலந்தாய்வின் 3 சுற்றுகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் இதுவரை மொத்தம் 1,23,031 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 70,403 இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. அதேவேளையில் கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில்1,16,620 இடங்கள் மட்டுமே நிரம்பின. அதனுடன் ஒப்பிடும் இந்தாண்டு சோ்க்கை அதிகரித்திருப்து குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : “முல்லைப் பெரியாற்றில் புதிய அணை தேவையில்லை” – மெட்ரோமேன் ஸ்ரீதரன் கருத்து!

இதையடுத்து, காலியிடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6ம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tneaonline.org எனும் வலைதளம் மூலமாக செப்டம்பர் 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதில் தகுதியானவர்களுக்கு சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்படும். அதன் பின்னர் எஸ்சிஏ காலியிடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பா் 10, 11-ஆம் தேதிகளில் நடைபெறும் என சேர்க்கைக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
#EngineeringAdmissioncounsellingEngineeringCoursestnea
Advertisement
Next Article