3வது ஒருநாள் போட்டி | இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. அதன்படி, நடந்து முடிந்த முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டியில் வென்று ஆறுதல் வெற்றி பெற இந்தியா தீவிரம் காட்டும். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வெல்ல ஆஸ்திரேலியா முனைப்பு காட்டும். இதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். எந்த அணி வெற்றி பெற உள்ளது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
அணிகளின் விவரம்,
இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் பட்டேல், லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், மேத் ரென்ஷா, அலெக்ஸ் கேரி, கனோலி, மிட்செல் ஓவன், சேவியர் பார்லெட், மிட்செல் ஸ்டார்க் அல்லது ஜேக் எட்வர்ட்ஸ், ஆடம் ஜம்பா, நாதன் எலிஸ் அல்லது ஹேசில்வுட்.