இலங்கை சிறையிலிருந்து 38 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை!
01:39 PM Nov 09, 2023 IST
|
Web Editor
Advertisement
இலங்கை சிறையிலிருந்து 38 தமிழ்நாடு மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
Advertisement
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 14 மற்றும் 28-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்று தலைமன்னார், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து 5 விசைப்படகையும் அதிலிருந்து 38 மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது.
இந்த நிலையில் சிறையில் இருந்த 38 பேரையும் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது. 38 மீனவர்களுக்கும் இன்று சிறை காவல் முடிந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 67 தமிழக மீனவர்கள் கைதாகி இலங்கை சிறையில் வைக்கப்பட்ட நிலையில், நேற்று 4 பேரும், இன்று 38 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Next Article