சீனாவில் தொடர் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு!
சீனாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. நாட்டின் முக்கிய மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. தொடர் கனமழையால் நாட்டின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. கனமழை எதிரொளியாக எங்கும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இந்த கனமழையால் பாதிப்பு காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பீஜிங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.ஏராளமான கார்கள் மற்றும் லாரிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மின் துண்டிப்பால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் பெய்துள்ள கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.