Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மார்ச்-க்குள் 30% ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும்- அமைச்சர் சக்கரபாணி!

03:19 PM Nov 06, 2023 IST | Syedibrahim
Advertisement

தமிழ்நாட்டில் வரும் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீத ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

Advertisement

இது குறித்து உணவுத்துறை அமைச்சர்  சக்கரபாணி தெரிவித்ததாவது:

மார்ச் மாதத்துக்குள் 30 சதவிகித ரேஷன்  கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும்.  9 மாதங்களுக்குள் திட்டத்தை அனைத்து ரேசன் கடைகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.

புதிய குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  பொங்கலுக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது பொது விநியோக கடைகளில் பயோமெட்ரிக் முறை அவ்வப்போது செயல் இழப்பதால் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து அனைத்து ரேசன் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags :
IrisRegistrationMarchMinisterChakrapaniRationShopsTNPDS
Advertisement
Next Article