Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா | அடுத்தடுத்து நடந்த புதிய மாற்றங்கள்...

08:09 AM Dec 08, 2023 IST | Web Editor
Advertisement

அண்மையில் நடந்து முடித்து சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி 3 அமைச்சர்கல் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

Advertisement

மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத் சிங் படேல், ரேனுகா சிங் ஆகியோர் சட்டப்பேரவை தேர்தலில் வென்றதை தொடர்ந்து தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

இதனை அவர் ஏற்றுக்கொண்டதையடுத்து, மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு வேளாண்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் துறை இணை அமைச்சராக ஷோபா கரந்தலாஜே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர், ஜல்சக்தித் துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும், மத்திய இணை அமைச்சர் பாரதி பவார் பழங்குடியினர் விவகாரத்துறையை கூடுதலாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
Next Article