Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வான்கடே மைதானத்தில் MSD அடித்த 3சிக்ஸர்களும்... 3சாதனைகளும்!

09:57 AM Apr 15, 2024 IST | Web Editor
Advertisement

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக எம்.எஸ்.தோனி வான்கடே மைதானத்தில் சத்தமில்லாமல் நிகழ்த்திய 3சாதனைகள் குறித்து விரிவாக காணலாம்

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 29-வது லீக் ஆட்டம் நேற்று (ஏப். 14) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே களமிறங்கினர். ரஹானே 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின், களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, கேப்டன் ருதுராஜ் மற்றும் ஷிவம் துபே இருவரும் களத்தில் இருந்தனர்.  ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.  ஷிவம் துபே கடைசி வரை ஆட்டமிழக்காமல் பந்துகளை சிக்ஸர்களை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார்.  38 பந்துகளில் 66ரன்கள் எடுத்த அவர் 10 பவுண்டிரிகள் மற்றும் 2சிக்ஸர்கள் விளாசினார்.  இறுதி ஓவரில் ஷிவம் துபேயுடன் கைகோர்த்த எம்.எஸ்.தோனி முதல் 3 பந்துகளில் சிக்ஸர்கள் விளாசி அதிரடி காட்டினார். 4பந்துகளில் 20 விளாசிய தோனியின் ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ராஜ விருந்துதான்.

இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு சிஎஸ்கே அணி 206 ரன்கள் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் விளையாடி ரன்களை அதிரடியாக குவிக்கத் தொடங்கினர். இஷான் கிஷன் 23 ரன்களுக்கு பத்திரானா பந்துகளில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த வீரர்களும் பத்திரானா பந்துகளுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுகளை பத்திரானாவே வீழ்த்தினார். ஆனாலும் எதற்கும் அசராமல் ஹிட் மேனாக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரோஹித் ஷர்மா கடைசிவரை ஆட்டமிழக்காமல் நிதானமாக விளையாடி ரன்களை அதிகரித்தார்.


அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்தது.  வெறுமனே 20 ரன்கள் வித்தியாசத்தில்தான் மும்பை அணி தோல்வியை தழுவியது. தோனி அடித்த 20 ரன்கள் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியமான ரன்களாக பார்க்கப்படுகிறது.

மும்பை அணி ஹோம் கிரவுண்ட் என அழைக்கப்படும் வான்கடேவில் மஞ்சள் படையின் ஆக்ரோஷமான சப்தங்கள் சேப்பாக்கத்தை பார்த்தது போல் இருந்தது என கிரிக்கெட் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இப்போட்டியான ஆட்ட நாயகனாக 4விக்கெட்களை வீழ்த்திய மதீஷ் பத்திரானா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் எம்.எஸ்.தோனி 20 ரன்கள் எடுத்ததின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக 5000ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்கிற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சுரேஷ் ரெய்னா 200 போட்டிகளில் விளையாடி 5129 ரன்கள் குவித்துள்ளார்.

அதேபோல ஐபிஎல் போட்டிகளில் 5000ரன்களை கடந்த 4வது இந்திய வீரர் என்கிற சாதனையையும் எம்.எஸ்.தோனி படைத்துள்ளார்.  இதுவரை விராட் கோலி ஆர்சிபி அணிக்காக 8006 ரன்களும் , ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5470 ரன்களும் , சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 5529 ரன்களும் குவித்துள்ளனர்.

அதேபோல தோனி இப்போட்டியில் இன்னொரு மிக முக்கியமான சாதனையையும் சத்தமில்லாமல் படைத்துள்ளார். அதாவது இதுவரை ஒரே அணிக்காக அதிக போட்டிகள் விளையாடியவர் என்கிற சாதனையை கையில் வைத்திருப்பவர் ஆர்சிபி அணி வீரரான விராட் கோலி. அவர் ஆர்சிபி அணிக்காக இதுவரை 258போட்டிகள் விளையாடியுள்ளார். இந்த நிலையில் நேற்றைய போட்டி எம்.எஸ்.தோனிக்கு 250வது போட்டியாகும். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக அதிக போட்டிகள் விளையாடிய இரண்டாவது வீரர் என்கிற சாதனையை தோனி படைத்துள்ளார்.

Tags :
Cskcsk vs miFinisher DhoniMS DhoniMSDThala DhoniWankade
Advertisement
Next Article