Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கடலில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
12:27 PM Oct 02, 2025 IST | Web Editor
கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், நெம்மேலி கிராமம், சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த 28.9.2025 அன்று மாலை சுமார் 5.00 மணியளவில் சென்னை, பெரம்பூர் அகரம் பகுதியிலிருந்து மகேந்திரா வேன் மூலம் சுற்றுலா வந்த 17 நபர்களில் பெரம்பூர், சக்கரபாணி தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 36) த/பெ.சந்திரன் என்பவர் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

Advertisement

மேலும் அவரது இரண்டு மகள்கள் கார்த்திகா (வயது 17) மற்றும் துளசி (வயது 16) ஆகிய இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டு 30.9.2025 அன்று மேற்படி இருவரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்ற துயரகரமானச் செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
chengalpatuCHIEF MINISTERM.K. StalinseaTamilNadu
Advertisement
Next Article