Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உச்ச நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் - மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
08:39 AM May 27, 2025 IST | Web Editor
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில் முதல் கொலீஜியம் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.

Advertisement

மேலும், உயர் நீதிமன்றத்திற்கு ஐந்து புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதேபோன்று உயர் நீதிமன்றங்களுக்கு நான்கு தலைமை நீதிபதிகள் உட்பட 22 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம். எம்.ஸ்ரீவாஸ்தவா சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி யாக இடம் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இவர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 25 உயர் நீதிமன்றங்களில் 1,122 நீதிபதிகள் பதவிகள் உள்ளன. இதில் 354 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
CollegiumcourtHigh Court judgesrecommendstransfer
Advertisement
Next Article