Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அடுத்தடுத்து உருவாகும் 3 காற்றழுத்த தாழ்வுநிலை!

தமிழ்நாட்டில் 16ம் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
08:41 AM Nov 13, 2025 IST | Web Editor
தமிழ்நாட்டில் 16ம் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் 16ம் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அந்தவகையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்தார். அதன்படி, வருகிற 15-ம் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதன் காரணமாக 16-ம் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும். 17, 18-ம் தேதிகளில் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கனமழையும் பதிவாகக்கூடும்.

Advertisement

மேலும் 18, 19-ம் தேதிகளில் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும் எனவும் கூறினார். இதனைத்தொடர்ந்து 21ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, வடகடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையை கொடுக்கும் என்றும், இதன் மூலம் 16ம் தேதி முதல் 25-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரம் அடைந்து காணப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Tags :
low pressureRainAlertweatheralertWeatherForecastWeatherUpdate
Advertisement
Next Article