3 பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
பீகார் மாநிலம் போஜ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த ஒருவர் தடுப்பின் மீது ஏறி சாலையை கடக்க முயன்றார். அப்போது அவர் மீது எதிர்த் திசையில் அதிவேகமாக வந்த பைக்கும் சரியான பாதையில் சென்ற மற்றொரு பைக்கும் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்தனர்.
இதையும் படியுங்கள் : சாம்பியன்ஸ் டிராபி | மழையால் ரத்தான ஆட்டம்… அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா!
உடனடியாக அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 3 பைக்குகள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.