Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#TestCricket | மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா!

06:58 AM Aug 19, 2024 IST | Web Editor
Advertisement

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பறியது. 

Advertisement

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி அந்நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது.

அந்த வகையில், நடைபெற்ற முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் தொடர் கயானாவில் கடந்த 15ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த தொடரின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 160 ரன்களும், மேற்கிந்திய தீவுகள் அணி 144 ரன்களும் எடுத்தன. தென் ஆப்பிரிக்க அணி 16 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நிலையில் 2வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து, நேற்று 3வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க அணி 80.4 ஓவரில் 246 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் கைல் வெரின், மார்க்ரம் ஆகியோர் அரைசதம் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 66.2 ஓவர்களில் 222 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 45 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபடா மற்றும் கேஷவ் மகாராஜ் தலா 3 விக்கெட்டுகளையும், டேன் பீட் மற்றும் வியான் முல்டர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மேலும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக கைப்பற்றுவது இது 10-வது முறையாகும். இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு அணிக்கெதிராக 10 தொடர்களை தொடர்ச்சியாக கைப்பற்றிய முதல் அணி என்ற உலக சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்துள்ளது.

Tags :
#SportsCricketSA vs WISouth AfricaTest serieswest indiesWI vs SA
Advertisement
Next Article