Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 போட்டி: 47 பந்துகளில் சதம் அடித்து அசத்திய அபிஷேக் ஷர்மா!

07:50 PM Jul 07, 2024 IST | Web Editor
Advertisement

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா சார்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

Advertisement

கடந்த ஜூன் 29-ம் தேதி தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது. இதனைத்தொடர்ந்து இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி நேற்று (ஜூலை 6) நடைபெற்றது. இந்த போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதையடுத்து ஜிம்பாப்வே அணி 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று (ஜூலை 7) நடைபெறுகிறது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : “அசாம் வெள்ளம் குறித்த அமித்ஷாவின் கருத்து அவரின் அறியாமையை காட்டுகிறது” – காங். எம்.பி. கவுரவ் கோகாய்!

அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் 4 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மேலும், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் விளாசி 47 பந்துகளில் 100 ரன்களில் எடுத்து தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து, களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்தார் ரிங்கு சிங். இவர்கள் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags :
Abhishek SharmaCenturyIndiaT20Zimbabwe
Advertisement
Next Article