2வது டி20 போட்டி - ஆஸி. அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியுடன் உள்ள கிரிக்கெட் தொடருக்கு சூர்ய குமார் யாதவ் தலைமையில் டி20 அணியை அறிவித்தது இந்திய அணி.
டி20 போட்டியின் இரண்டாவது ஆட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய ஜெய்ஷ்வால் மற்றும் கெய்க்வாட் ஜோடி அதிரடியாக ஆடிய நிலையில் ஜெய்ஷ்வால் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ருதுராஜ், மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அரைசதம் விளாசிய அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அசத்தினார்.
இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகள் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.