Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தொகுதி பங்கீடு தொடர்பாக 2ம் கட்ட பேச்சுவார்த்தை - மதிமுக, IUML உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுக அழைப்பு!

12:41 PM Feb 24, 2024 IST | Web Editor
Advertisement

திமுக கூட்டணி கட்சிகளுடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற உள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.

இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்.24) நடைபெற உள்ளது. இதற்காக மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) ஆகிய கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உடனான பேச்சுவார்த்தை மாலை 4:30 மணிக்கும், மதிமுக உடனான பேச்சுவார்த்தை மாலை 5.30 மணிக்கும் நடைபெறுகிறது.

இந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சித் தலைவர் காதர் முகைதீன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ ஷாஜகான், தேசிய செயலாளர் அப்துல் பாசித், மாநிலச் செயலாளர் ஆடுதுறை ஷாஜகான் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதையும் படியுங்கள் : குஜராத்தில் 24 தொகுதிகளில் காங். போட்டி - ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை திமுகவிடம் கேட்ட நிலையில், இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையிலும், அதே தொகுதியை கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
DMKElectionElection2024IUMLLok sabha Election 2024MDMK
Advertisement
Next Article