Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விறுவிறுப்பாக நடைபெறும் 2ம் கட்ட வாக்குப்பதிவு: செய்திகளை உடனுக்குடன் வழங்கி வரும் நியூஸ்7 தமிழ்...

11:30 AM Apr 26, 2024 IST | Web Editor
Advertisement

13 மாநிலங்களில், 88 தொகுதிகளில் இன்று காலை முதல் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க நியூஸ்7 தமிழ் செய்தியாளர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 70 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின.

இன்று (ஏப். 26) அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதேநேரம் உள்ளூர் சூழலை சார்ந்து வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் மாறுபடுகிறது.

வயநாடு தொகுதி, கேரளா

கேரளாவில் 20 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் வயநாடு தொகுதி தேர்தல் களத்தில் நமது நியூஸ்7 தமிழ் செய்தியாளர் பிரசாந்த் அளித்த தகவல்களை காண:

திருவனந்தபுரம் தொகுதி, கேரளா

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி தேர்தல் களத்தில் நமது நியூஸ்7 தமிழ் செய்தியாளர் ஆல்வின் அளித்த தகவல்களை காண:

பெங்களூரு, கர்நாடகா

அதேபோல், கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று 14 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு, மத்திய பெங்களூரு, சிக்கபள்ளாபூர், கோலார், சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர், பெங்களூரு ரூரல், ஹாசன், தட்சிண கன்னடா, உடுப்பி-சிக்கபள்ளாபூர் ஆகிய 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.

களத்தில் நமது நியூஸ்7 தமிழ் செய்தியாளர் திரிலோகச்சந்தர் அளித்த தகவல்களை காண:

ஜம்மு தொகுதி, ஜம்மு - காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரில் 5 நாடாளுமன்ற தொகுதிகளே உள்ளன. இந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த 5 தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த வகையில், இன்று ஜம்மு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறூகிறது.

களத்தில் இருந்து நமது நியூஸ்7 தமிழ் செய்தியாளர் வசந்தி அளித்த தகவல்களை காண:

Tags :
Election2024Elections With News7TamilElections2024jammu kashmirKarnatakaKeralaLoksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesParliament Election 2024
Advertisement
Next Article