Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2ம் கட்டமாக மக்களவை தேர்தல் | கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது...

07:10 AM Apr 26, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்டமாக, இன்று, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சேர்ந்த 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வேட்பாளர்களாக உள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில்,  முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 70 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின. இந்நிலையில், இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது . அதன்படி, அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதேநேரம் உள்ளூர் சூழலை சார்ந்து வாக்குப்பதிவு முடிவடையும் நேரம் மாறுபடுகிறது.

மாநிலம் / யூனியன் பிரதேசம்தொகுதிகள்
அசாம்5
பீகார்5
சத்தீஸ்கர்3
ஜம்மு & காஷ்மீர்1
கர்நாடகா14
கேரளா20
மத்தியபிரதேசம்6
மகாராஷ்டிரா8
மணிப்பூர்1
ராஜஸ்தான்13
திரிபுரா1
உத்தரபிரதேசம்8
மேற்குவங்கம்3

முன்னதாக இரண்டாம் கட்டத்தில் மொத்தமாக 89 தொகுதிகளில் வாக்குப்பத்வு நடைபெறுகிறது. ஆனால், கடைசி நேரத்தில் மத்திய பிரதேச மாநிலம் பேடுல் தொகுதியில், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்  திடீரென உயிரிழந்தார். இதன் காரணமாக அந்த தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி அன்று அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

சத்தீஸ்கர், அசாம், மணிப்பூர் மற்றும் ஜம்மு & காஷ்மிர் போன்ற பதற்றமான பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். மிகவும் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஆயுதம் ஏந்திய துணை ராணுவப்படையினர் உடன் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை கொண்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Tags :
election 2024Election commissionElection2024India AllainceLok Sabha ElectionLok Sabha Elections 2024📷
Advertisement
Next Article