Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#PAKvsAUS | 2வது ஒருநாள் போட்டி - ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!

04:47 PM Nov 08, 2024 IST | Web Editor
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான் 2வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 35 ரன் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுப் 5 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷபீக் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் குவித்தனர்.

இதில் சைம் அயூப் 82 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து பாபர் அசாம் களம் இறங்கினார். இறுதியில் பாகிஸ்தான் 26.3 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 169 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி வரும் 10ம் தேதி பெர்த்தில் நடைபெற உள்ளது.

Advertisement
Next Article