Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி - ஜன.16 - 18 வரை நடைபெறும்!

08:59 AM Jan 14, 2024 IST | Web Editor
Advertisement

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்  2 - வது சர்வதேச புத்தக கண்காட்சி நாளை மறுநாள் தொடங்க உள்ளது.

Advertisement

சென்னையில் இரண்டாவது சர்வதேச புத்தக கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நாளை மறுநாள் (ஜன. 16) தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் தொடக்க காலத்தில் இருந்து, தற்போது செயற்கை நுண்ணறிவு வளர்ந்த காலம் வரை எழுத்துகளின் வளர்ச்சி குறித்து கருப்பொருளாக கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் முதலாவது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி கடந்த 5 ஆம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

கடந்த ஆண்டு நடந்த கண்காட்சியில் 30 நாடுகள் பங்கேற்று இருந்தன. அதில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  அந்த நேரத்தில் 120 புத்தகங்கள் அந்தந்த நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்க செய்வதற்காக ஒப்பந்தம் செய்யபட்ட  நிலையில், அதில் 52 புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு சர்வதேச புத்தக கண்காட்சியில் 39 நாடுகள் பங்கேற்க உள்ளன. அதேபோல்ர இந்தியாவில் 10 மாநிலங்கள் கலந்து கொள்கின்றன. இதன் மூலம் 50 விதமான மொழிகளை சேர்ந்த புத்தக பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

Tags :
Book FairBooksChennainandhampakam
Advertisement
Next Article