Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

38 நாட்களில் படப்பிடிப்பை முடித்தது "2K லவ் ஸ்டோரி" படக்குழு !!

07:57 PM Aug 24, 2024 IST | Web Editor
Advertisement

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வந்த “2K லவ் ஸ்டோரி” படப்பிடிப்பை 38 நாட்களில் முடித்து படக்குழு அசத்தியுள்ளது. 

Advertisement

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் ரொமான்ஸ் ஜானராக உருவாகி வரும் திரைப்படம் “2K லவ் ஸ்டோரி”. தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகள் மூலம், ரசிகர்களின் மனதை வென்ற இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

வெட்டிங் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புதுமுக நாயகன் ஜெகவீர் நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சமீபத்தில் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலக்கட்டத்திற்கு முன்பாகவே 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து, அசத்தியுள்ளது படக்குழு.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் டி இமான் இணையும் 10வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக், டீசர் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
2K Love StoryBala SaravananD. ImmanSuseenthiranVinodhini
Advertisement
Next Article