Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரளாவில் கொரோனாவுக்கு 3 பேர் பலி - புதிதாக 292 பேருக்கு பாதிப்பு!

12:24 PM Dec 20, 2023 IST | Web Editor
Advertisement

கேரளாவில் நேற்று ஒரே நாளில் 292 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Advertisement

நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில ஆண்டுகளாக குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்புடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று (டிச.19) ஒரே நாளில் மட்டும் 292 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் ஜேஎன்1 கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்ய இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தலைமையில் இணை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.  இதில் மீண்டும் கட்டாயம் முகக்கவசம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா தொற்றால் மக்கள் கவலையடையத் தேவையில்லை என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.  புதிய வகை கொரோனா பரவல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும்,  பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள்,  அறைகள்,  ஆக்ஸிஜன் படுக்கைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.

 

Tags :
CoronaGeneral 1infectionKeralaNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article