சத்தீஸ்கரில் 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
09:11 PM Apr 16, 2024 IST
|
Web Editor
இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மாவோயிஸ்டுகள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும், ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் நடைபெற்ற இச்சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
சத்தீஸ்கர் மாநிலத்தில் 29 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
Advertisement
சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்களவை தேர்தல் நடக்க இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. இந்நிலையில், கன்கர் மாவட்டம் சோட்டபெட்டிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பினகுண்டா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டின்போது, முக்கிய தளபதி உட்பட 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Article