250 ஆண்டுகள் பழமையான 'செர்ரி' கண்டுபிடிப்பு! - எங்கு தெரியுமா?
அமெரிக்க முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் மவுண்ட் வெர்னான் தோட்டத்திலிருந்து 250 ஆண்டுகள் பழமையான செர்ரி பழங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் மவுண்ட் வெர்னான் வீட்டின் தோட்டத்தில் 250 ஆண்டுகள் பழமையான 12 கண்ணாடி பாட்டில்கள் புதைக்கப்பட்டிருப்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், அந்த கண்ணாடி பாட்டில்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மண்ணில் இருந்து எடுத்தனர்.
இதையடுத்து, அந்த கண்ணாடி பாட்டில்கள் அனைத்துப் சீல் வைக்கப்பட்டு இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், கண்ணாடி பாட்டில்களின் சீல் அகற்றப்பட்டது. இந்த பாட்டில்கள் முழுவதும் செர்ரி பழங்களால் நிறைந்திருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் – முதலிடத்தில் கோலி! அடுத்த இடங்களில் யார் தெரியுமா?
இந்த செர்ரி பழங்கள் அனைத்தும் 18ம் நூற்றாண்டு கண்ணாடி பாட்டிலில் அடைத்து, இறுக்கமாக மூடி, மண்ணில் புதைக்கப்பட்டது. அந்த செர்ரி பழங்கள் அனைத்தும் இரண்டு நூற்றாண்டுகளாக அழுகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு வரலாற்று பாதுகாப்பு முறைகளின் செயல்திறனைக் எடுத்து காட்டுகிறது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செர்ரி பழங்களை மண்ணில் புதைத்து வளர வைக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.