Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேனிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா - 3 பேர் கைது!

08:47 PM Dec 21, 2024 IST | Web Editor
Advertisement

ஆந்திராவிலிருந்து தேனிக்கு 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தார்கள்.

Advertisement

தேனி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளரின் கீழ் செயல்படும் போதை தடுப்பு சிறப்புக் காவல்துறையினருக்கு வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணியின் போது வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, வாகனத்தில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாகனத்தில் வந்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த பிரதீபன் (24), சந்திரன் (50), சசிகுமார் (30) ஆகிய மூவரையும் கைது செய்ததோடு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா மற்றும் காரையும் பறிமுதல் செய்த போதை தடுப்பு சிறப்புக் காவல் படையினர் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டதில் 'மூவரும் ஆந்திர மாநிலம் சிலுக்கனூர் பேட்டையில் உள்ளவரிடம் 21 கிலோ கஞ்சாவை வாங்கி ஆந்திராவிலிருந்து பேருந்து மற்றும் ரயில் மூலமாகத் திருச்சி வரை கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.

திருச்சியிலிருந்து வாகனத்தின் மூலம் தேனி மாவட்டத்திற்குக் கஞ்சாவைக் கடத்தி வந்ததாகவும், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது' விசாரணையில் மூலமாக தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி காவல்துறையினர் மூவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Tags :
CrimedrugDrug traffickingNews7Tamilnews7TamilUpdatesTheni
Advertisement
Next Article