Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது 2025 ஐபிஎல் அட்டவனை... சேப்பாக்கில் முதல் எல் கிளாசிகோ!

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
06:42 PM Feb 16, 2025 IST | Web Editor
Advertisement

18 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இத்தொடருக்கான் ஏலம் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதில்  சில அணிகளில் இருந்து சில வீரர்கள் விடுவிக்கப்பட்டும், சில வீரர்கள் புதிதாகவும் சேர்க்கப்பட்டனர்.

Advertisement

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக பெங்களூர், பஞ்சாப், லக்னோ ஆகிய அணிகள் தங்கள் புதிய கேப்டன்களை அறிவித்துள்ளனர். அதன்படி பெங்களூர் அணிக்கு ரஜத் படிதாரும், பஞ்சாப் அணிக்கு ஸ்ரேயஸ் ஐயரும், லக்னோ அணிக்கு ரிஷப் பண்ட்டும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 18 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி 2025 ஐபிஎல் முதல்போட்டி வழக்கப்போல் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியின் ஹோம் கிரவுண்டான ஈடன் கார்டன்ஸஸில் வருகிற மார்ச் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கொல்கத்தாவை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.

அதே போல் இறுதிப்போட்டி அதே மைதானத்தில் வருகிற மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி (எல் கிளாசிகோ)  மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Tags :
#viratkohliCskIPL 2025IPL SchedulemiMSdhonircprohitsharma
Advertisement
Next Article