Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2024 ஐபிஎல் போட்டி - 8 வீரர்களை விடுவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.!

05:54 PM Nov 26, 2023 IST | Web Editor
Advertisement

2024 ஐபிஎல் போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில்  8 வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்துள்ளது.

Advertisement

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐயால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் முதலாக தொடங்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

16-வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரையில் இந்தியாவில் நடத்தப்பட்டது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு சென்றன. கடைசியாக ரவீந்திர ஜடேஜாவின் சிறப்பான பேட்டிங்கால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியனானது.

இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் 17-வது சீசன் நடக்கும் அதே வேளையில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஐபிஎல் போட்டிகளை வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. 2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் 17-வது சீசனானது இந்தியாவில் தான் நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமல் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் தங்கள்  அணியிலிருந்து யார் யாரை  விடுவிக்கிறார்கள் என்கிற பட்டியலை அந்தந்த அணிகள் வெளியிட வேண்டும். இந்த நிலையில் எம்.எஸ். தோனி தலைமையில் செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  தங்கள் அணி சார்பில் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி மிகவும் முக்கியமான அணி.  அதிகம் முறை  ப்ளே-ஆஃப்க்கு தேர்வான அணியாக சிஎஸ்கே இருக்கிறது. மேலும் நடப்பு சாம்பினான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றோடு ஐபிஎல் அணிகள் தங்களுக்கான தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். மேலும் யார் யாரை அணியில் இருந்து விடுவித்துள்ளது குறித்தும் பட்டியலை தர வேண்டும். இந்நிலையில் சிஎஸ்கே அணி நிர்வாகம் 8 வீரர்களை விடுவித்துள்ளது.

அதன்படி சிஎஸ்கே வீரர்

1. அம்பத்தி ராயுடு (ரூ.6.7 கோடி),

2. கைல் ஜேமிசன் (ரூ.1 கோடி),

3. சிசாண்டா மலாகா (ரூ.50 இலட்சம்),

4. ஆகாஷ் சிங் (ரூ.20 இலட்சம்),

5.பென் ஸ்டோக்ஸ் (ரூ.16.2 கோடி),

5. டுவைன் பிரிடோரியஸ் (ரூ.50 இலட்சம்),

6. பகவத் வர்மா (ரூ.20 இலட்சம்),

7. சுப்ரன்சு சேனாபதி (ரூ.20 இலட்சம்)

இதன்மூலம் ரூ.32.1 கோடி ரூபாய் சிஎஸ்கேவிடம் மீதமிருக்கிறது. 6 இடங்களுக்கான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் 3 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

Tags :
chennai super kingsCskIPL 2024IPL2023 MS DhoniMS DhoniRetain
Advertisement
Next Article