2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப் பட்டியல் - இந்தியா முதலிடம்.!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேற்றியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியாவும் 153 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இரண்டாம் இன்னிங்ஸில் மார்க்ரம் மட்டும் சதமடிக்க தென்னாபிரிக்கா 176 ரன்களுக்கு பும்ராவின் அசத்தலான பந்து வீச்சில் ஆல் அவுட்டானது. 79 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11.6 ஓவரில் 80/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி, இரண்டு போட்டிகளில் வெற்றி, ஒரு போட்டியில் சமன் மற்றும் ஒரு போட்டியில் தோல்வியை பெற்று 54.16 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாம் இடத்தில் தென்னாப்பிரிக்கா, மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து, நான்காம் இடத்தில் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.