உத்தரகாண்டில் அரசுப் பள்ளி அருகே ஜெலட்டின் குச்சி வெடிபொருட்கள் கண்டெடுப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோரா மாவட்டத்தின் சுல்ட் பகுதியில் உள்ள தபாரா கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியின் பள்ளி முதல்வர் சுபாஷ் சிங் பள்ளிக்கு அருகிலுள்ள புதர்களில் சந்தேகத்திற்கிடமான பொட்டலங்கள் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
இதனை தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தன. த தேடுதலின் போது புதர்களில் இருந்து 20 கிலோவுக்கும் அதிகமான 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து ஜெலட்டின் குச்சிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களால் கைப்பற்றப்பட்டன.
டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட தீவிர கண்கானிப்பால் அரியானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் உத்தரகாண்டில் 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.