Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

+2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் | மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

10:49 AM May 06, 2024 IST | Web Editor
Advertisement

2 பொது தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் உடனடியாக மறுதேர்வெழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது.  சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.  விடைத்தாள் திருத்தும் பணி ஏப். 2-இல் தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது.  மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது.

இந்நிலையில்,  ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.  மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை http://www.tnresults.in மற்றும் http://www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்தார்.
இந்நிலையில், தேர்வெழுதியவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.  தேர்ச்சி பெறாதவர்கள் உடனடியாக மறுதேர்வெழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
12 th Public Exam12 th Resultexamexam resultResultstamil nadu
Advertisement
Next Article