Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

+2 மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசுத் தோ்வுகள் இயக்கம்...

07:17 AM May 07, 2024 IST | Web Editor
Advertisement

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று முதல் 11ம் தேதி வரை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வு துறை அறிவித்துள்ளது.

Advertisement

பிளஸ் 2 முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக இன்று (மே 7) முதல் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சேதுராமவா்மா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்கள் மூலமாகவும் செவ்வாய்க்கிழமை (மே 7) காலை 11 மணி முதல் சனிக்கிழமை (மே 11) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியா்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை மே 9-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றைப் பதிவுசெய்து, இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதேபோன்று தனித்தோ்வா்கள் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து இணையதளத்தில் தாங்களே மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் எதாவது ஒன்றுக்கு மட்டுமே தோ்வா்கள் விண்ணப்பிக்க முடியும். தோ்வா்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன்பின்னா் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

Tags :
12 th ResultPlus 2Result 2024Resultsstudentstamil nadutn schools
Advertisement
Next Article