Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2 பத்ம விபூஷண்... 1 பத்ம பூஷண்... 5 பத்மஸ்ரீ... - இந்திய அளவில் ஜொலிக்கும் தமிழர்கள்..!

10:59 AM Jan 26, 2024 IST | Jeni
Advertisement

இந்தியாவில் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகள் இந்தாண்டு 8 தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் மொத்தம் 8 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பத்ம விபூஷண்

கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ், தெலுங்கு, வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் பரத நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமண்யத்திற்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பரத நாட்டியக் கலையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். கலைத்துறையில் இவரது சேவையை கொளரவிக்கும் வகையில் இவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷண்

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்-க்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த இவர், மக்களிடம் விழிப்புணர்வு மிக்க கருத்துகளை திரைப்படங்களின் மூலம் விதைத்தார். மக்களால் ‘கேப்டன்’ என்று அழைக்கப்பட்ட இவரது கலைத்துறை சேவையை கெளரவிக்கும் வகையில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒயிற்கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு கும்மி பயிற்சி அளித்ததற்காகவும் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் ஸ்குவாஷ் நட்சத்திரமான ஜோஷ்னா சின்னப்பாவுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இவர், தொடர்ந்து விளையாட்டுத்துறையில் இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளார்.

நெய்தல் பகுதி மக்களின் வாழ்க்கையை விவரிக்கும்படியான இலக்கியங்களை படைத்து புகழ்பெற்றவர் ஜோ டி குரூஸ். 2013 ஆம் ஆண்டு ‘கொற்கை’ எனும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவருக்கு, இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மருத்துவத்துறை சேவைக்காக ஜி.நாச்சியார், கலைத்துறை சேவைக்காக நாதஸ்வர வித்துவான் சேஷம்பட்டி டி சிவலிங்கத்திற்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
PadmaAwardsPadmaAwards2024PadmaBhushanPadmaShriPadmaVibhushantamilians
Advertisement
Next Article