Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஒரே நேரத்தில் 2 புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு - மீண்டும் #RedAlert ?

04:01 PM Oct 18, 2024 IST | Web Editor
Advertisement

வங்கக்கடலிலும் அரபிக் கடலிலும் ஒரே நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது.

Advertisement

வங்கக்கடலில் வரும் அக். 22-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற அக். 20-ம் தேதி உருவாகும் வளிமண்டல சுழற்சியால் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல அரபிக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. ஆனால், இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இந்தியப் பகுதியை விட்டு விலகிச் செல்லும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதா என்பது அடுத்தடுத்த நாள்களில் தெரியவரும். தற்போது வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நிலை கொண்டிருந்த நிலையில் நேற்று (அக். 17) காலை வட சென்னை மற்றும் தெற்கு ஆந்திரத்துக்கு இடையே கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதீத கனமழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புயல் சின்னம் ஆந்திரம் நோக்கி சென்றது குறிப்பிடத்தத்தக்கது.

Tags :
arabian seabay of bengalCyclonic StormIMDMeteorological DepartmentNew CycloneNews7Tamil
Advertisement
Next Article