+2 தேர்வு முடிவுகள் வெளியானது!
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. ஏப்ரல் 4ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய நிலையில் 15ஆம் தேதி, அதாவது திட்டமிட்டதற்கு முன்கூட்டியே விடைத்திருத்தும் பணிகள் நிறைவடைந்தது.
இந்நிலையில் இன்று 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்பே நிறைவு பெற்றதால் 1 நாள் முன்கூட்டியே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார் .
இந்த ஆண்டு 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 12 வகுப்பு பொதுத் தேர்வினை 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகளும், 18,344 தனித்தேர்வர்கள், 145 கூர்நோக்கு இல்ல மாணவர்கள் என மொத்தம் 8,21,057 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
மொத்தம் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்விற்கும் 45 ஆயிரத்திற்கு மேற்பட்ட தேர்வறை கண்காணிப்பாளர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் 7, 53,142 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
4,05,472 (96.70 சதவிகிதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவிகிதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 26,877 பேர் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஒருவர் கூட ஆங்கிலத்தில் 100 / 100 மதிப்பெண் பெறவில்லை. வழக்கம்போல், மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தனியார் சுயநிதி பள்ளிகள் 98.88 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. 91.44 சதவீதம் அரசு பள்ளிகள் தேர்ச்சி அடைந்துள்ளன. மாவட்ட வாரியான தேர்ச்சியில் அரியலூர் மாவட்டம் 98.82% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 92 பள்ளிகளில் 58 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது. அரியலூரை தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களை பெறுகின்ற.
அரியலூர் 98.32%
ஈரோடு 96.88%
திருப்பூர் 95.64%
கன்னியாகுமரி 95.06%
கடலூர் 94.99%.