Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேசிய மகளிர் ஆணையத்தில் 2.34 லட்சம் புகார்கள்! உ.பி.யிலிருந்து மட்டும் 1 லட்சத்திற்கு மேல் புகார்கள்!

08:37 PM Dec 07, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் இருந்து 5,733 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இருந்து 166 புகார்கள் பதிவாகியுள்ளன.

Advertisement

கடந்த 5 ஆண்டுகளில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு 2.34 லட்சம் புகார்கள் வந்துள்ளன. அதில் கிட்டத்தட்ட பாதி புகார்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மட்டுமே வந்துள்ளன. 1,20,093 புகார்கள் உ.பி. மாநிலத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

உ.பி.க்கு அடுத்தபடியாக டெல்லி (22,231), மகாராஷ்டிரா (11,562), ஹரியானா (11,225) ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக புகார்கள் வந்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சாகேத் கோகலே எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு மாநிலங்களவையில் அளித்த பதிலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், தமிழ்நாட்டில் இருந்து 5,733 புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் இருந்து 166 புகார்கள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் இருந்து 4559, கேரளாவில் இருந்து 1551, ஆந்திரப் பிரதேசத்தில் 2131, தெலுங்கானாவில் 2325 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags :
#ComplaintsNational Commission for WomenncwNews7Tamilnews7TamilUpdatesUttarpradesh
Advertisement
Next Article