Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி...  வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்!

06:57 PM Jun 28, 2024 IST | Web Editor
Advertisement

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்,  இந்திய மகளிர் அணி 525 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

Advertisement

இந்தியா - தென்ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களமிறங்கினர்.  இந்த ஜோடி சிறப்பாக ஆடி அணிக்கு 292 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய வீராங்கனைகள் என்ற சாதனையை ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி படைத்துள்ளனர். முன்னதாக, பாக்., அணியின் சஜ்ஜிதா ஷா மற்றும் கிரண் பலுச் ஜோடி 241 ரன்களை எடுத்திருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

இதனை அடுத்து ஸ்மிரிதி மந்தனா 149 ரன் எடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய சுபா சதீஷ் 15 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  தொடர்ந்து ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ஜோடி சேர்ந்தார்.  ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஷபாலி வர்மா 194 பந்தில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.  அவர் இரட்டை சதம் அடித்த நிலையில் 205 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.  இதில் 23 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 525 ரன்கள் எடுத்தது.  தென்னாப்பிரிக்க அணி தரப்பில் டெல்மி டக்கர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 42 ரன்களுடனும்,  ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  2ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

Tags :
ind vs saIndiaSouth AfricaTest Cricketwomens cricket
Advertisement
Next Article