Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 19 மீனவர்கள் சென்னை வந்தனர்!

04:29 PM Apr 04, 2024 IST | Web Editor
Advertisement

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 19 பேரும் இன்று காலை சென்னை வந்தடைந்தனர்.  

Advertisement

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதையும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை வாடிக்கையாக கொண்டுள்ளது.  சில சமயங்களில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவங்களும் நடக்கின்றன.

இந்த நிலையில்,  எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டின் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்களை கடந்த மாதம் 6 ஆம் தேதி இலங்க கடற்படையினர் கைது செய்தனர்.  அதனுடன் அவர்களின் 2 படகுகளையும் சிறை பிடித்தனர்.

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.  இதனையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள்,  இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  தொடர்ந்து இலங்கை நீதிமன்றம் தமிழ்நாட்டு மீனவர்கள் 19 பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது.  பின்னர் அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் இந்திய தூதரகம் மீனவர்களை இலங்கையின் கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தது.  மீனவர்கள் 19 பேரும் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.  அவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags :
arrestedChennaiFishermanPuducherySri Lankatamil nadu
Advertisement
Next Article