”திமுக ஆட்சியில் 19 போலி என்கவுண்டர்கள்” - காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டமைப்பு குற்றசாட்டு!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள மூங்கில் தொழுவு பகுதியில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு ஏற்பட்ட உண்டைபில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக்கொலை செய்பப்பட்டார்.
அதிமுகவைச் சேர்ந்த மடத்துக்குளம் தொகுதி சட்டமன்ற மன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பை பராமரித்து வந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கப்பாண்டியன் மணிகண்டன் ஆகியோருக்குன் ஏற்பட்ட தகராயைத் தொடர்ந்து, அருகிருந்தவர்கள் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் குடிமங்களம் காவல் நிலையம் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் மணிகண்டன் என்பவர் சண்முகவேலை வெட்டியதாக தெரிகிறது. பலத்த காயமடைந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் பொதுமக்களிடை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொலை செய்ததாக கூறப்படும் மணிகண்டன். அடுத்த நாள் காலை 10.30 மணியளவில் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைய முயன்றார். நீதிபதி இது தமது அதிகார எல்லைக்குள் வராது எனக் கூறி, மனுவை பெற்றுக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர் திருப்பூர் மாவட்ட போலீசாரிடம் சரணடைந்தார். ஆனால், சரணடைந்த சில மணி நேரங்களிலேயே போலீசாரை தாக்க முயற்சித்தால், மணிகண்டன் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மனித உரிமை அமைப்புகள் இது போலி என்கவுண்டர் என கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் இது போலி மோதல் சம்பவம் என்றும், கட்டுக் கொல்லப்பட்டவர்களின் எண்ணக்கை ஆகும் என்றும் செரிவித்துள்ளனர். மாநில மனித உரிமை ஆணையம் இந்த இரு சம்பவங்களையும் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தெரிவித்துள்ளது.