18வது மக்களவைத் தேர்தல் : ஆட்சியை கைப்பற்றப் போவது யார்..? - இன்று வாக்கு எண்ணிக்கை!
18வது மக்களவைத் தேர்தல் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதன் மூலம் ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்பது குறித்து இன்று முடிவுகள் வெளியாக உள்ளது.
நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை :
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்..
“ வாக்கு எண்ணிக்கைக்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்படும். தேர்தல் பார்வையாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். படிவம் 17 சி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை அங்கு அமைக்கப்பட்ட தேர்தல் முகவர்களிடம் காட்டப்படும்
படிவம் 20ல் தேர்தல் பார்வையாளர் கையொப்பமிடுவார். வாக்கு எண்ணிக்கை அதிகாரியும் அங்கு இருப்பார். ஒவ்வொரு சுற்று முடிவுகளும் உடனுக்குடன் வெளியிடப்படும் இதன் விவரங்கள் ஊடகங்களுக்கு வழங்கப்படும். ஐந்து வாக்குகள் ஒப்புகைச் சீட்டுடன் பொருத்தி பார்க்கப்படும். அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படும்
இந்த நிலையில் இன்று காலை சரியாக 8மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். முதலாவதாக தபால் வாக்கு எண்ணப்படும். மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா. ஒடிசா போன்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அதேபோல தமிழ்நாட்டில் இடைத் தேர்தல் நடைபெற்ற விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.