Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மே மாதத்தில் மட்டும் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி” - கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்!

கேரளாவில் மே மாதத்தில் மட்டும் 182 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
09:49 AM May 22, 2025 IST | Web Editor
கேரளாவில் மே மாதத்தில் மட்டும் 182 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
Advertisement

கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது,

Advertisement

“ஓமிக்ரான் JN1 வகைகள், LF7 மற்றும் NB1.8, தென்கிழக்கு நாடுகளில் பரவுகின்றன. அவை அதிக வீரியம் கொண்டவை. எனவே சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் கட்டாயம் முகமூடி அணிய வேண்டும்.

முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் தீவிர நோய் உள்ளவர்கள் பொது இடங்களிலும், பயணம் செய்யும் போதும் முகமூடி அணிவது நல்லது. மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம். சுகாதார பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தேவையில்லாமல் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கவும்.

கைகளை அவ்வப்போது சோப்பு போட்டுக் கழுவுவது நல்லது. சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையில் உள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி
சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும். மாநில அளவிலான ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம் (ஆர்ஆர்டி) ஆலோசனை செய்து மாநிலத்தின் பொதுவான நிலைமையை மதிப்பீடு செய்தது.

அதில் மே மாதத்தில், மாநிலத்தில் 182 கோவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
கோட்டயம் மாவட்டத்தில் 57 தொற்றுகளும், எர்ணாகுளத்தில் 34 தொற்றுகளும், திருவனந்தபுரத்தில் 30 தொற்றுகளும் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் அறிகுறிகள் உள்ளவர்கள் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆர்டிபிசிஆர் கருவிகள் மற்றும் இதர பாதுகாப்பு உபகரணங்களை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது” என தெரிவித்தார்.

Tags :
COVID-19Health Minister Veena GeorgeKeralaOmicron
Advertisement
Next Article