Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இசைத்துறையில் 16ஆண்டுகள் நிறைவு - #IU செய்த உதவியால் குவிந்து வரும் பாராட்டு!

08:22 PM Sep 20, 2024 IST | Web Editor
Advertisement

பிரபல தென்கொரிய பாடகியான லீ ஜீ-யுன் இசைத்துறையில் 16 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு செய்த உதவியால் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

Advertisement

உலகம் முழுவதும் கொரியன் டிராமா பிரபலமாவதற்கு இசை ஒருபுறம் உதவியது என்றால், அவர்கள் செய்து வரும் நன்கொடைகளும் உதவிகளும், அவர்களை பல தரப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்தது என்றால் அது மிகையல்ல. கேடிராமா மற்றும் கேபாப் குழுவினர் தங்களது பிறந்தநாள் மற்றும் Anniversary ஆகியவற்றை முன்னிட்டு பல உதவிகளை வழங்கி வருவர்.

அந்த வகையில் BTS குழுவின் தலைவரும், ‘Rap Monster’,  ‘RM’ என்ற புனைப்பெயர்களால் அழைக்கப்படும் கிம் நம்-ஜூன், 2019 ஆம் ஆண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு அளித்த நன்கொடை, செவி மாற்றுத்திறன் கொண்ட மாணவர் ஒருவரை கே-பாப் நட்சத்திரம் ஆக வேண்டும் என்று ஊக்கப்படுத்தியது. இது BTS ரசிகர்களால் நெகிழ்ச்சியோடு பார்க்கப்பட்டது.

அந்த வகையில் இசைத்துறையில் 16 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் பிரபல தென்கொரிய பாடகியும் நடிகையுமான லீ ஜி யுன் மிக முக்கியமான உதவியை செய்து ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறார். அதாவது அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவும் வகையில் தொண்டு நிறுவனங்களுக்கு 225 மில்லியன் வோன்-ஐ (ரூ.1.40 கோடி) நன்கொடையாக வழங்கிய லீ ஜி-யுன் வழங்கியுள்ளார்.

லீ ஜி யுன் தனது 15வயது தனது இசைப் பயணத்தை தொடங்கியவர். கடந்த 2008ம் ஆண்டு Lost and Found எனும் ஆல்பம் பாடலின் மூலமாக அறிமுகமான இவர் இதன் பின்னர் சில முக்கியமான தொடர்களிலும் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இவரது நடிப்பில் உருவான ஹோட்டல் டெலூனா, மூன் லவ்வர்ஸ், மை மிஸ்டர் உள்ளிட்ட தொடர்கள் இவரது நடிப்புக்கென தனி அங்கீகாரத்தையும் ரசிகர்களையும் பெற்றுத்தந்தது.

இவர் தற்போது தனது IU ஸ்டேஜ் மற்றும் தனது ரசிகர் மன்றமான ‘IUAENA’ வின் பெயரில் இந்த உதவியை வழங்கியுள்ளார். இவர் செய்துள்ள உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags :
DonationIULee ji eun
Advertisement
Next Article