குவைத்தில் ஒரு தமிழர் உட்பட கள்ளச்சாராயம் குடித்த 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு!
தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடுதான் குவைத். இங்கு தமிழர்கள் உள்ளிட்ட ப்ல்வேறு இந்தியர்கள் புலம்பெயர் தொழிலார்களாக வேலை செய்து வருகின்றனர். குவைத்தில் நீண்டகாலமாக மதுவிலக்கை உள்ளது. மேலும் போலி மதுபானங்களை தயாரித்து விநியோகித்ததில் ஈடுபட்ட பல சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் குவைத்தின் அஹ்மதி கவர்னரேட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்ற இந்திய தொழிலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்தனால் பாதிப்புகள் ஏற்பட்டதை அடுத்து 40 க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் குவைத் ஃபர்வானியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக சிகிச்சையில் உள்ள தொழிலாளர்களுக்கு கண் பார்வையிழப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற வையால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று தென்காசியை சேர்ந்த ஒரு தமிழர் உட்பட கள்ளச்சாராயம் குடித்த 16 இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குவைத் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய தொழிலாளர்களின் நிலை குறித்து கண்காணித்து வருகிறது